ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வெளிநாடு செல்வதைத் தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி மற்றும் அவரது நிறுவனத்துடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் முடக்கியுள்ளனர்.சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில், ஜெம் வீரமணி கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.