சைதாப்பேட்டை போராட்ட வழக்கில் ஆ.ராசா, மா.சுப்பிரமணியனிடம் போலீசார் விசாரணை – “எதற்காக இந்த விசாரணை என காவல் துறைக்கே தெரியவில்லை” என ஆ.ராசா பேட்டி. "4 மணி நேரம் விசாரணை" சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக மூத்த வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை ஆகியோர் ஆஜராகினர். நான்கு மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார்.