Prisoner escape: தேனி சிறையிலிருந்து வலிப்பு வந்தது போல் நடத்து 17 கைதிகள் தப்பிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது இரண்டு விஷம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒன்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது விவகாரம் மற்றொன்று தேனி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள் தப்பியோடியது தான். வலிப்பு வந்தது போல் நடிப்பு தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி கிளைச் சிறையில் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறி சிறை வார்டனை அழைத்துள்ளனர்.