Gold Rate: ஆபரணத் தங்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்ப்போம். சென்னையில் கடந்த சில மாதங்களாகவே ஆபரணத் தங்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை சரசரவென குறைந்து வந்த நிலையில் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.