TNPSC Group 4 Free Coaching: அரசு தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு வேலை இல்லாமல் பல லட்சம் இளைஞர்கள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையில் தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு வேலை கிடைக்காதவர்களுக்கு தனியார் துறையிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படுகிறது. அதாவது பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.