பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி, குரு பூஜை விழாவையொட்டி, அவரது சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசம் போலீஸ் பாதுகாப்புடன் மதுரையில் உள்ள வங்கிக் கி... பின்னா், இந்தக் கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கிக் கிளையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படும்..இதன்படி, கடந்த 25-ஆம் தேதி மதுரை அண்ணாநகரில் உள்ள வங்கி பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து எடுக்கப்பட்ட தங்கக் கவசம் பசும்பொன் தேவா் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்கப்பட்டது..இதையடுத்து, தேவா் ஜெயந்தி, குரு பூஜை விழா நிறைவடைந்ததையொட்டி, தேவா் சிலையிலிருந்து தங்கக் கவசம் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது.