Ecuador Newborn Baby With a Thick Moustache Goes Viral.. What’s the Real Story? குய்டோ: ஈக்வடார் நாட்டில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு அடர்த்தியான மீசை இருப்பது போன்ற வீடியோ இணையத்தில் 2 நாட்களாகவே வைரலாகி வருகிறது. பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தைக்கு இப்படி ஒரு மீசையா என்று பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ஆனால், இந்த வீடியோ உண்மையானதா அல்லது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.பொதுவாக, குழந்தைகள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே அவர்களின் உடலில் மென்மையான முடிகள் வளரத் தொடங்கும். இந்த முடிகளுக்கு லானுகோ (Lanugo) என்று பெயர்.