ஓசூர் அருகே காதலி கழுத்தறுத்துக் கொன்று விட்டு லாரி முன் பாய்ந்து காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கலேந்திராவைச் சேர்ந்தவர் பிரதீப் (21). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள ஜி மங்கலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் திவ்யா ஜெயஸ்ரீ (20) என்பவரைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஜீ மங்களம் பகுதியில் உள்ள பணிபுரியும் நிர்வாகத்தில் தங்கி இருக்கும் அறைக்கு பிரதீப் அழைத்து வந்துள்ளார். காதலி கொலை அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.