Kanimozhi: இப்படி எல்லா வழிகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கேள்வி. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி ஹேமலதா கடந்த 11-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய அன்று இரவு வீட்டில் உறங்கியபோது திடீரென மாயமானார். இதுதொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டும் குளம், ஏரி, கிணறு, பாறை இடுக்குகள் மற்றும் கரும்பு தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் துப்பு துலங்கவில்லை. 10 நாட்கள் ஆகியும் கிடைக்காததை அடுத்து விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.