In an accident near Chengelput , a man hold an umbrella over his friends body to protect him from rain. செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மகாலட்சுமி நகர் பகுதியில் சாலையோரத்தில் கார் மோதியதில் இறந்த நண்பரின் சடலம் மழையில் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக அவருடைய நண்பர் குடை பிடித்துக் கொண்டிருந்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.செங்கல்பட்டு மகாலட்சுமி நகர் பகுதியில் சாலையோரத்தில் குடிசை அமைத்து வசித்து வந்தார் முதியவர் ஒருவர். அவர் நேற்று இரவு சாலையோரத்தில் படுத்திருந்த போது அவ்வழியாக வந்த கார் பின்னோக்கி திரும்பியது.